Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டோஹாவில் 2030ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

டோஹாவில் 2030ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

வாசிப்புநேரம் -

2030ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளை, டோஹா ஏற்று நடத்தவிருக்கிறது.

அந்தத் தகவலை, ஆசிய ஒலிம்பிக் மன்றம் நேற்று உறுதிப்படுத்தியது.

அதேபோல், 2034 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ரியாத் ஏற்று நடத்தும்.

போட்டிகளை ஏற்று நடத்த, உறுப்பினர்கள் இடையே இணையம் வழி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், கத்தார் தலைநகர் டோஹாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன.

இரண்டாம் இடத்தில், சவுதி அரேபியத் தலைநகர் ரியாத் வந்தது.

இதற்கு முன்னர் டோஹா, 2006ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளது.

கத்தார் 2032ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளையும் ஏற்று நடத்த ஏலத்தில் களமிறங்கியுள்ளது.

கத்தாரில் 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்