Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நீச்சல்குளத்தில் அதிக அளவில் E.coli கிருமி - போட்டிகள் ரத்து

E.coli கிருமி அபாயம் காரணமாக, தோக்கியோவில் உடற்குறையுள்ளோருக்கான உலகக் கிண்ண மூவகைப் போட்டிகளின் நீச்சல் அங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
நீச்சல்குளத்தில் அதிக அளவில் E.coli கிருமி - போட்டிகள் ரத்து

படம்: REUTERS

E.coli கிருமி அபாயம் காரணமாக, தோக்கியோவில் உடற்குறையுள்ளோருக்கான உலகக் கிண்ண மூவகைப் போட்டிகளின் நீச்சல் அங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தோக்கியோவில் நடக்கவிருக்கும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆயத்த நிகழ்வாக அவை கருதப்படுகின்றன.

ஒடாய்பா மரின் பூங்காவில் உள்ள நீச்சல்குளத்தில் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால் தரச் சோதனைகளில் நீரில் கிருமிகள் அளவுக்கு அதிகமாக இருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

தற்போது அங்கு எழுந்துள்ள சுகாதார நெருக்கடி அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் போதும் ஏற்படுமா என்று அச்சம் நிலவுகிறது.

இந்தப் பருவத்தில் தோக்கியோவில் அதிக வெப்பம் இருக்கும் என்பதால் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளை 2 மாதம் முன்பாகவே நடத்தத் திட்டமிட்டுள்ளது ஏற்பாட்டுக் குழு.

பெரும்பாலான வகை E.coli கிருமிகள் உடல்நலத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டா. ஆனால் சில வகைக் கிருமிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். சில வேளைகளில் சிறுநீரகச் செயலிழப்புக்கு இட்டுச் செல்லலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்