Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய பிரிவாக அறிமுகமாகும் மின்னியல் விளையாட்டுகள்

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வெல்வதற்கான புதிய பிரிவாக மின்னியல் விளையாட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய பிரிவாக அறிமுகமாகும் மின்னியல் விளையாட்டுகள்

(படம்: AFP/FRED DUFOUR)

2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வெல்வதற்கான புதிய பிரிவாக மின்னியல் விளையாட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிய ஒலிம்பிக் மன்றம், (Olympic Council of Asia) மின்னியல் விளையாட்டுகளையும் breakdancing நடனத்தையும், இவ்வாரம் புதிய பிரிவுகளாக அறிவித்தது.

மின்னியல் விளையாட்டுகள், ஒலிம்பிக் (Olympic) போட்டியில் சேர்க்கப்படவேண்டும் என்ற நீண்டகாலக் கனவு நிறைவேற, இது ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

சீனாவின் ஹாங்சோ (Hangzhou) மாநிலத்தில்,
2022இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

2018இல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது, மின்னியல் விளையாட்டுகள் அதிகப் பிரபலமாகத் திகழ்ந்தது.

கடந்த ஆண்டு பிலிப்பீன்ஸில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், ஒரு பிரிவாகவும் மின்னியல் விளையாட்டுகள் இடம்பெற்றன.

ஒலிம்பிக் போட்டியில், மின்னியல் விளையாட்டுகளைச் சேர்ப்பதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை.

ஆனால், கொரோனா கிருமித்தொற்று அதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாமென்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்