Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீகில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் பொதுவான இடங்களில் நடத்தப்படும்

இங்கிலீஷ் பிரிமியர் லீகில் எஞ்சியுள்ள ஆட்டங்களைத் தொடர்வதற்குப் பொதுவான இடங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீகில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் பொதுவான இடங்களில் நடத்தப்படும்

(படம்: AFP/Paul ELLIS)

இங்கிலீஷ் பிரிமியர் லீகில் எஞ்சியுள்ள ஆட்டங்களைத் தொடர்வதற்குப் பொதுவான இடங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீகில் இடம்பெற்றுள்ள 20 குழுக்களிடமும் அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

நிலைமை மேம்பட்டதும் போட்டிகளைத் தொடர்வதற்கு அவை மீண்டும் கடப்பாடு தெரிவித்தன.

ஆட்டங்கள் குழுக்களின் சொந்த ஊர்களிலேயே நடைபெற்றால் விளையாட்டு அரங்கங்களுக்கு வெளியே ரசிகர்கள் திரளக்கூடும் என்று பிரிட்டிஷ் காவல்துறையினர் அக்கறை தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி போட்டிகள் மீண்டும் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கோவிட்-19 நிலவரம் காரணமாக நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டத்தை வெளியிட பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.

மார்ச் மாதம் 13ஆம் தேதியிலிருந்து இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்