Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மீண்டும் தொடங்கிய இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள் - மென்செஸ்ட்டர் சிட்டி வெற்றி

மீண்டும் தொடங்கிய இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள் - மென்செஸ்ட்டர் சிட்டி வெற்றி

வாசிப்புநேரம் -
மீண்டும் தொடங்கிய இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள் - மென்செஸ்ட்டர் சிட்டி வெற்றி

படம்: AFP

OVID-19 நோய்த்தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக நிறுத்திவைக்கப்பட்ட இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் நேற்று மீண்டும் தொடங்கின.

நேற்றிரவு இரண்டு ஆட்டங்கள் நடந்தன.

ஓர் ஆட்டத்தில் முன்னணி அணிகளான மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) , ஆர்சனல் (Arsenal) மோதின.

அதில் மென்செஸ்ட்டர் சிட்டி 3 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் ஆர்சனல் அணியை வீழ்த்தியது.

மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா (Aston Villa) அணியும் ஷெஃபீல்ட் யுனைட்டட் (Sheffield United) அணியும் பொருதின. அந்த ஆட்டம் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

நேற்றைய ஆட்டங்களைக் காண ரசிகர்களுக்கு விளையாட்டு அரங்கத்திற்குள் அனுமதி வழங்கப்படவில்லை.

இனவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இந்தப் பருவம் முடியும்வரை இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் Black Lives Matter என்ற வாசகம் வீரர்களின் ஆடைகளில் அச்சிடப்பட்டிருக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்