Images
  • EPL pic
    ( படம்: AFP )

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: முக்கியமான கட்டத்தை நோக்கி இன்றைய ஆட்டங்கள்

இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி தற்போது முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தப் பருவத்திற்கான பட்டியலில் அணிகளின் இடங்கள் ஏற்றம் இறக்கமாக இருக்கின்றன.

இதனால் இன்றைய ஆட்டங்களில் லிவர்ப்பூலும், ஆர்சனலும் தங்களின் எதிர் அணியை வெல்ல முயலும்.

இன்று மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

முதல் ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 8:30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது அதில் ஆர்சனல் வெஸ்ட் ஹேம் யுனைட்டட் அணிகள் மோதவுள்ளன.

இரவு 11 மணிக்கு 5 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

முக்கியமான ஆட்டங்களின் விவரம் :

லெஸ்ட்டர் சிட்டியும் சவுத்ஹேம்ப்ட்டனும் பொருதவுள்ளன.

பிரைட்டன் லிவர்ப்பூலைச் சந்திக்கிறது.

பின்னிரவு 1:30 மணிக்கு செல்சியும் நியூகாசல் யுனைட்டும் மோதுகின்றன.

பட்டியலில் லிவர்ப்பூல் அணி 54 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  

Top