Images
  • Epl
    படம்: REUTERS 

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் மென்செஸ்ட்டர் சிட்டி

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளின் இந்தப் பருவத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

புள்ளிப்பட்டியலில் வாரந்தோறும் அணிகளின் இடங்கள் மாறிக்கொண்டே இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது.

நேற்றிரவு நடந்த சில ஆட்டங்களின் முடிவுகள்: -

ஆர்சனல் (Arsenal), மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) ஆகியவை சந்தித்த ஆட்டத்தில், கோல் ஏதுமின்றி இரு அணிகளும் சமநிலை கண்டன.

எவர்ட்டனும் (Everton) நியூகாசல் யுனைட்டடும் (Newcastle United) பொருதிய ஆட்டத்தில் நியூகாசல் யுனைட்டட் அணி 2 கோல் புகுத்தி வெற்றியடைந்தது.

எவர்ட்டன் அணி கோல் ஏதும் போடவில்லை.

மென்செஸ்ட்டர் சிட்டியும் (Manchester City) செஃப்ஃபீல்ட் யுனைட்டட்டும் (Sheffield United), பொருதிய ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் சிட்டி 1 க்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றியடைந்தது.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 44 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் 41 புள்ளிகளுடன் மென்செஸ்ட்டர் யுனைட்டட் உள்ளது.
 

Top