Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள்

சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள்

வாசிப்புநேரம் -
சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள்

(படம்: REUTERS/David Klein

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தப் பருவத்தில் சில முன்னணி அணிகள் தடுமாறிவருகின்றன. சில வலுவிழந்த அணிகள் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி அதன் ரசிகர்களுக்கு உற்சாகம் தருகின்றன.

இன்று இரவு 4 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

இரவு 8:30 மணிக்கு, பட்டியலில் முதலிடத்தில் உள்ள லிவர்ப்பூல் ( Liverpool) கிறிஸ்ட்டல் பேலஸ் (Crystal Palace) அணியைச் சந்திக்கிறது.

சிறப்பாக விளையாடிவரும் சவுத்ஹேம்ப்ட்டன் (Southampton) இரவு 11 மணிக்கு மென்செஸ்ட்டர் சிட்டியுடன் (Manchester City) மோதுகிறது.

பின்னிரவு 1:30 மணிக்கு எவர்ட்டன் (Everton) அணியும் ஆர்சனலும் (Arsenal) பொருதுகின்றன.

இப்பருவத்தின் பட்டியலில் லிவர்ப்பூல் 28 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 25 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் சவுத்ஹேம்ப்ட்டன்
24 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்