Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: இன்றிரவு பலப்பரீட்சை நடத்தும் மென்செஸ்ட்டர் சிட்டி - செல்சி

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: இன்றிரவு பலப்பரீட்சை நடத்தும் மென்செஸ்ட்டர் சிட்டி - செல்சி

வாசிப்புநேரம் -

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.

இந்தப் பருவத்தின் புள்ளிப்பட்டியலில் வாரந்தோறும் அணிகளின் இடங்கள் மாறிக்கொண்டே இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது.

இன்றைய போட்டிகளின் முடிவுகளும் புள்ளிப்பட்டியலில் சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

இன்று இரவு 2 ஆட்டங்கள் நடக்கவுள்ளன.

இரவு 10:15 மணிக்கு, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள லெஸ்ட்டர் சிட்டியை (Leicester City) நியூகாசல் யுனைட்டட் (Newcastle United) அணி சந்திக்கிறது.

பின்னிரவு 12:30 மணிக்கு மென்செஸ்ட்டர் சிட்டியுடன் (Manchester City) செல்சி அணி பொருதுகிறது.

இரு அணிகளும் ஆட்டத்தில் வெல்லக் கடுமையாகப் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பருவத்தின் பட்டியலில் 33 புள்ளிகளுடன் லிவர்ப்பூல் முதலிடத்தில் உள்ளது.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) 33 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur)
29 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்