Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரை வெல்லுமா எவர்ட்டன் ?

இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியில் இன்று டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் எவர்ட்டனும் மோதவுள்ளன.

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக்: டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரை வெல்லுமா எவர்ட்டன் ?

படம்: AP IMAGES

இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியில் இன்று டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும் எவர்ட்டனும் மோதவுள்ளன.

ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி பின்னிரவு 12 மணிக்குத் தொடங்கவுள்ளது.

இந்த ஆட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வென்றால் மென்செஸ்ட்டர் சிட்டி அணிக்கு அது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

கடந்த இரண்டு வாரங்களாகச் சில ஆட்டங்களில் எதிர்பாராத முடிவுகள் கிடைத்துள்ளதால் தற்போது முக்கியமான கட்டத்தை நோக்கி லீக் போட்டிகள் நகர்ந்துள்ளன.

பட்டியலில் லிவர்ப்பூல் அணி 48 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

மென்செஸ்ட்டர் சிட்டி 44 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 39 புள்ளிகளுடன் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்