Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரிமியர் லீக் ஆட்ட ரசிகர்களைக் கட்டுப்படுத்த சட்டங்களை வகுப்பதே சிறந்த வழி: பிரிட்டிஷ் காவல்துறை

பிரிமியர் லீக் ஆட்டங்கள் மீண்டும் தொடங்கும்போது, அரங்கங்களுக்கு  வெளியே ரசிகர்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த சட்டங்களை வகுப்பதே சிறந்த வழி என்று பிரிட்டிஷ் காவல்துறை எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பிரிமியர் லீக் ஆட்ட ரசிகர்களைக் கட்டுப்படுத்த சட்டங்களை வகுப்பதே சிறந்த வழி: பிரிட்டிஷ் காவல்துறை

AFP/Paul ELLIS

பிரிமியர் லீக் ஆட்டங்கள் மீண்டும் தொடங்கும்போது, அரங்கங்களுக்கு வெளியே ரசிகர்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த சட்டங்களை வகுப்பதே சிறந்த வழி என்று பிரிட்டிஷ் காவல்துறை எச்சரித்துள்ளது.

கிருமிப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிரிமியர் லீக் ஆட்டங்களை அடுத்த மாதம் பார்வையாளர்களின்றி தொடங்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிடுகின்றனர். லீக்கில் இன்னும் 92 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

ஆட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் ரசிகர்கள் திரள்வர் என்று அக்கறை தெரிவித்துள்ளார் மேன்செஸ்ட்டர் காவல்துறைப் பிரிவின் தளபதி.

நோய்ப்பரவல் காலகட்டத்தில், மக்கள் கூடாமல் இருப்பதற்கு ஏற்பட்டாளர்கள் என்னென்ன நடைமுறைகளைச் செயல்படுத்துவர் என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டங்களை வகுப்பதன் மூலம், கூட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் லிவர்பூல் அணி பிரிமியர் லீக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கும் வேளையில் ரசிகர்கள் திரள்வதைத் தடுக்க முடியாது என்று கூறினார் அவர்.

ஆட்டங்களைத் தொடங்குவதற்கு முன்னர் கவனமாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்