Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: மென்செஸ்ட்டர் சிட்டி, லிவர்ப்பூல் அணிகள் தோல்வி

இந்த பருவத்தின் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக்: மென்செஸ்ட்டர் சிட்டி, லிவர்ப்பூல் அணிகள் தோல்வி

(படம்: REUTERS/Nigel Roddis)

இந்த பருவத்தின் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன.

சில முன்னணி அணிகள் தடுமாறும் வேளையில் சிறிய அணிகள் நன்றாகப் போட்டி கொடுத்து வருகின்றன.

நேற்றிரவு நடந்த சில ஆட்டங்களின் முடிவுகள்: -

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்
மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City)
மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியுடன் விளையாடியது.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றது.

லிவர்ப்பூல் ( Liverpool) அணி
ஃபுல்ஹாம் (Fulham) அணியுடன் மோதியது.

அதில் ஃபுல்ஹாம் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur )
கிறிஸ்ட்டல் பேலஸ் (Crystal Palace) பொருதிய ஆட்டத்தில் டாட்டன்ஹாம் 4 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை வென்றது

புள்ளிப் பட்டியலில் மென்செஸ்ட்டர் சிட்டி 65 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது

இரண்டாம் இடத்தில் 54 புள்ளிகளுடன் மென்செஸ்ட்டர் யுனைட்டட் உள்ளது.

சென்ற பருவத்தின் வெற்றியாளர் லிவர்ப்பூல் (Liverpool) 43 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

- Fotmob 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்