Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து திடலில் டென்னிஸ் பந்துகளை வீசிய ரசிகர்கள்... என்ன காராணம்?

UEFA யூரோ 2020 காற்பந்து போட்டிகளின் தகுதிச் சுற்றில் அயர்லந்தும் ஜார்ஜியாவும் சந்தித்த ஆட்டத்துக்கு இடையூறு விளைவிக்க, அயர்லந்து காற்பந்து ரசிகர்கள் திடலில் டென்னிஸ் பந்துகளை வீசியிருந்தனர்.

வாசிப்புநேரம் -
காற்பந்து திடலில் டென்னிஸ் பந்துகளை வீசிய ரசிகர்கள்... என்ன காராணம்?

படம்: AP images

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

UEFA யூரோ 2020 காற்பந்து போட்டிகளின் தகுதிச் சுற்றில் அயர்லந்தும் ஜார்ஜியாவும் சந்தித்த ஆட்டத்துக்கு இடையூறு விளைவிக்க, அயர்லந்து காற்பந்து ரசிகர்கள் திடலில் டென்னிஸ் பந்துகளை வீசியிருந்தனர்.

அயர்லந்து காற்பந்து சங்கத்தின் தலைமை நிர்வாகியாக ஜான் டிலானே (John Delaney) தொடர்ந்து பொறுப்பு வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்தப் போராட்டம்.

அதன் காரணமாகப் போட்டி 3 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

போட்டியில் அயர்லந்து 1-0 எனும் கோல் கணக்கில் ஜார்ஜியாவை வென்றது

சுவிட்சர்லந்து, டென்மார்க் அணிகள் பொருதிய ஆட்டம், 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

மால்ட்டாவைச் சந்தித்த ஆட்டத்தில், 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது, ஸ்பெயின்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்