Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஐரோப்பா லீக் காற்பந்து:ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற செவியா அணி

ஐரோப்பா லீக் காற்பந்து:ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற செவியா அணி

வாசிப்புநேரம் -
ஐரோப்பா லீக் காற்பந்து:ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற செவியா அணி

படம்: REUTERS

ஸ்பெயினின் செவியா (Sevilla) அணி இந்த ஆண்டின் ஐரோப்பா லீக் கிண்ணத்தை வென்றுள்ளது.

இன்று அதிகாலை 3 மணிக்கு நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் செவியா அணியும் இத்தாலியின் இன்டர் மிலான் (Inter Milan) அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் செவியா அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கிண்ணத்தை வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தர்ப்புக்கு இரண்டு கோல்கள் புகுத்தின.

இரண்டாவது பாதியில் இன்டர் மிலான் அணியின் நட்சத்திர வீரர் ரோமெலு லுகாகு (Romelu Lukaku) தவறுதலாகத் தமது அணிக்கு எதிராகக் கோலைப் புகுத்தினார்.

அது ஆட்டத்தின் போக்கைத் தலைகீழாக மாற்றியது.

இறுதியில் செவியா அணிக்கு வெற்றி.

அடுத்தடுத்து 6 முறை கிண்ணத்தை வென்று, ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது செவியா அணி.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்