Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

புதிய காற்பந்துத் தொடருக்கு அரசியல்வாதிகள், முன்னாள் காற்பந்து விளையாட்டாளர்கள் எதிர்ப்பு

புதிய காற்பந்துத் தொடருக்கு அரசியல்வாதிகள், முன்னாள் காற்பந்து விளையாட்டாளர்கள் எதிர்ப்பு 

வாசிப்புநேரம் -

ஐரோப்பாவின் பிரபலமான பெரிய காற்பந்துச் சங்கங்கள், தற்போதுள்ள சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடருக்குப் பதில் European Super League காற்பந்துத் தொடரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

புதிய அமைப்பு, தற்போதைய சாம்பியன்ஸ் லீக்கிற்குச் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

European Super League-கில் இடம்பெறும் 12 காற்பந்துச் சங்கங்களில் ஆறு, இங்கிலிஷ் பிரீமியர் லீக்கைச் சேர்ந்தவை.

ஆர்சனல், செல்சி, லிவர்ப்பூல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், மென்செஸ்ட்டர் சிட்டி, மென்செஸ்ட்டர் யுனைட்டட் ஆகியவையே அந்த ஆறு குழுக்கள்.

இத்தாலியக் காற்பந்துச் சங்கங்களான
AC மிலான், இன்டர் மிலான், யுவெண்ட்டஸ், ஸ்பெய்னின் பார்சலோனா, ரியால் மாட்ரிட் (Real Madrid), எட்லடிக்கோ மாட்ரிட் -ஆகியவையும் புதிய காற்பந்துச் சங்கக் குழுவில் இடம்பெற்றுள்ளன.

ஆனால், அந்த நடவடிக்கையை அரசியல்வாதிகளும், முன்னாள் காற்பந்து ஆட்டக்காரர்களும் குறைகூறியுள்ளனர்.

விளையாட்டு பொதுவானது. அதில், பணக்கார அணிகள் மட்டும் தங்களுக்கென ஒரு தொடரை அமைத்துக் கொண்டு விளையாடுவது சரியல்ல என்று அவர்கள் கருத்துக் கூறினர்.

மேலும், FIFA, UEFA முதலிய காற்பந்துச் சங்கங்களும் புதிய அமைப்பு அறிமுகமாவதை விரும்பவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்