Images
  • F1
    படம்: REUTERS

விபத்தில் சிக்கிய தாயைச் சந்தித்த பிறகு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கார்ப் பந்தய வீரர்

Formula 1 கார்ப் பந்தய வீரர் செர்ஜியோ பெரெஸூக்கு (Sergio Perez) இரண்டு நாள்களுக்கு முன்னர் Covid-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

மெக்சிக்கோவில் தமது தாய் விபத்தில் சிக்கியதை அறிந்ததும் ஒரு தனியார் விமானம் மூலம் அவர் சொந்த நாட்டிற்குச் சென்றார்.

மருத்துவமனையில் தாயைச் சந்தித்திவிட்டு இவ்வார இறுதியில் நடக்கும் கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ள பிரிட்டன் திரும்பிய பெரெஸூக்கு நோய்த்தொற்று இருப்பது மருத்துவ சோதனையில் உறுதியானது.

அவரிடம் நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தும் நோய்த்தொற்று எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை என்று பெரெஸ் தெரிவித்தார்.

Covid-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் F1 கார்ப் பந்தய ஓட்டுநர் செர்ஜியோ பெரெஸ்.

அதனால் அவர் நாளை மாலை பிரிட்டனில் நடக்கவுள்ள கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

பெரெஸ் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்பதால் 9-ஆம் தேதி நடக்கும் பந்தயத்திலும் அவரால் பங்கேற்கமுடியாது.

அவருக்கு பதிலாக Racing Point அணிக்கு மாற்று வீரர் களம் இறங்குகிறார்.  

Top