Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

COVID-19 கிருமித்தொற்று அச்சத்தால் ஷங்காய் F1 கார்ப் பந்தயம் நிறுத்தப்படுமா ?

COVID-19 கிருமித்தொற்று அச்சத்தால் ஷங்காய் F1 கார்ப் பந்தயம் நிறுத்தப்படுமா ?

வாசிப்புநேரம் -

சீனாவில் COVID-19 கிருமித்தொற்றால் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் F1 கார்ப் பந்தயம் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதுபற்றி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ப் பந்தயம் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறவிருக்கிறது. ஆனால் அது ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம் என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வியட்நாம் முதல்முறையாக F1 கார்ப் பந்தயத்தை இந்த ஆண்டு ஏற்று நடத்தவிருக்கிறது. ஷங்காய் பந்தயத்துக்கு 2 வாரங்கள் முன்னதாக அது இடம்பெறும். அங்கும் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதால் அந்தப் பந்தயமும் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் அடுத்த மாதம் நடக்கவிருந்த சில முக்கிய விளையாட்டுப் போட்டிகள் COVID-19 கிருமித்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்