Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வியட்நாமில் அடுத்த ஆண்டு F1 கார்ப் பந்தயம் இல்லை

வியட்நாமில் அடுத்த ஆண்டு F1 கார்ப் பந்தயம் இல்லை 

வாசிப்புநேரம் -
வியட்நாமில் அடுத்த ஆண்டு F1 கார்ப் பந்தயம் இல்லை

(கோப்புப் படம்: AFP/Nicolas Lambert)

வியட்நாமில் அடுத்த ஆண்டு F1 கார்ப் பந்தயம் நடைபெறாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக, பந்தயம் ரத்து செய்யப்பட்டதாக BBC செய்தி நிறுவனமும் மற்ற ஊடகங்களும் குறிப்பிட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஹனோயின் நகரமன்ற மக்கள் குழுத் தலைவர் நுவென் டக் சுங் (Nguyen Duc Chung) கைது செய்யப்பட்டார்.

அவர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ரகசியத் தகவல்களை வெளியே கசிய விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனால், ஹனோயில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பந்தயம் ரத்து செய்யப்படுவதற்கு, அதுவே காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த பருவத்திற்கான பந்தய இடங்கள் மற்றும் நாள்களின் நகல் விவரங்களை, F1 அமைப்பு இன்று வெளியிட்டது. அதில் வியட்நாம் பெயர் இல்லை.

அண்மைத் தகவல்களின்படி, அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சவுதி அரேபியா ஒரு பந்தயத்தை ஏற்று நடத்துகிறது. அது இரவு நேரப் பந்தயம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு வியட்நாமில் முதல்முறையாக F1 கார் பந்தயம் நடைபெறவிருந்தது.

ஆனால் COVID-19 நோய்ப்பரவல் காரணமாக பந்தயம் ரத்து செய்யப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்