Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஓட்டுநருக்கு COVID கிருமித்தொற்று இருந்தாலும் பந்தயம் தொடரும் - F1 கார்ப் பந்தய அமைப்பு

F1 கார்ப் பந்தயப் போட்டிகளின்போது ஓட்டுநர் எவருக்கேனும்  COVID-19 கிருமித்தொற்று இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டாலும் பந்தயம் திட்டமிட்டபடி  நடந்தே தீரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஓட்டுநருக்கு COVID கிருமித்தொற்று இருந்தாலும் பந்தயம் தொடரும் - F1 கார்ப் பந்தய அமைப்பு

(கோப்புப் படம்: AFP/Nicolas Lambert)

F1 கார்ப் பந்தயப் போட்டிகளின்போது ஓட்டுநர் எவருக்கேனும் COVID-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் பந்தயம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை F1 அமைப்பின் தலைமை நிர்வாகி சேஸ் கேரி (Chase Carey) தெரிவித்தார்.

ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பதால் முழுப் பந்தயத்தையும் ரத்து செய்வது சரியான முடிவு அல்ல என்றார் சேஸ்.

அணிகள் தங்களது ஊழியர்களின் உடல்நலத்தைத் தொடர்ந்து கவனிப்பதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பறுவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பருவத்தின் F1 பந்தயங்கள் COVID-19 கிருமித்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டன; சில ரத்து செய்யப்பட்டன.

முதல் பந்தயம் ஜூலை 5ஆம் தேதி ஆஸ்ட்ரியாவில் நடக்கவிருக்கிறது.

முதற்கட்டமாகப் பார்வையாளர்கள் இன்றியே பந்தயங்கள் நடைபெறும்.

பந்தயத்தின் போது பத்து அணிகளைச் சேர்ந்த சுமார் 1,200 ஊழியர்கள் பந்தயத் திடலில் இருப்பார்கள்.

பொதுவாக பந்தயத்தின் போது ஓர் அணியில் 130 ஊழியர்கள் இருப்பார்கள், ஆனால் தற்போதைய கிருமித்தொற்று நெருக்கடியால் அந்த எண்ணிக்கை ஓர் அணிக்கு 80 ஊழியர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்