Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிறமான நீச்சல் குளம்... காரணம் ?

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிறமான நீச்சல் குளம்... காரணம்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிறமான நீச்சல் குளம்... காரணம் ?

(படம்: Reuters/ Antonio Bronic)

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

2016ஆம் ஆண்டு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பல சர்ச்சைகள் எழுந்தன.

அதில் தலைப்புச் செய்தியானது, போட்டிகளுக்கான பச்சை நிற நீச்சல் குளங்கள்.

குறிப்பாக, முக்குளிப்பு, நீர் போலோ (water polo) ஆகிய போட்டிகளுக்கான நீச்சல் குளங்கள் பச்சை நிறமாக மாறியிருந்தன.

அதற்காக அதிகாரிகள் அளித்த காரணங்களிலும் முரண்பாடு இருந்தன.

சிலர் பாசி தான் காரணமென்றனர்.

ஏற்பாட்டாளர்களோ, நீச்சல் குளங்களைச் சுத்திகரிக்கும் ரசாயனங்கள் முடிந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

குளங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் குளோரின், ரசாயனத்துடன் கலந்து அதைப் பச்சையாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்