Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

'FIFA உலகக் கிண்ணக் காற்பந்திற்கு தகுதிபெறும் இலக்கை அடைய கலாசார, சமூக இளையர் அமைச்சு ஆதரவளிக்கும்'

FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு சிங்கப்பூர் அணியைத் தகுதிபெறச் செய்யப் பாடுபடும், சிங்கப்பூர்க் காற்பந்து சம்மேளனத்தின் லட்சியத்திற்கு ஆதரவளிப்பதாகக் கலாசார, சமூக இளையர் அமைச்சு தெரிவித்தது.

வாசிப்புநேரம் -

FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு சிங்கப்பூர் அணியைத் தகுதிபெறச் செய்யப் பாடுபடும், சிங்கப்பூர்க் காற்பந்து சம்மேளனத்தின் லட்சியத்திற்கு ஆதரவளிப்பதாகக் கலாசார, சமூக இளையர் அமைச்சு தெரிவித்தது.

2034-ஆம் ஆண்டு நடைபெறும் FIFA உலக கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு சிங்கப்பூர் அணியைத் தகுதி பெறச்செய்யும் 'Goal 2034' திட்டம் தொடர்பில் அமைச்சும் சம்மேளனமும் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளன.

'Goal 2034' முயற்சி நாட்டின் காற்பந்துத் துறைக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் என்றும், சிங்கப்பூரை மேலும் பெருமிதம் கொள்ளச் செய்யும் என்றும் சம்மேளனமும், அமைச்சும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மேளனம் அந்த லட்சியத்தைக் கொண்டிருப்பதாகவும், அரசாங்கம் அந்த இலக்கை நிர்ணயிக்கவில்லை என்றும் கடந்த வாரம், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பேய் யாம் கெங் (Baey Yam Keng) கூறியிருந்தார்.

ஆனால், அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் அந்த இலக்கை அடைய முடியாது என்று சம்மேளனம் மற்றோர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதனை அடுத்து, இந்தக் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்