Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து வீராங்கனைகளுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்க FIFA ஒப்புதல்

காற்பந்து வீராங்கனைகளுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்க, புதிய விதிமுறைகளின்கீழ் FIFA எனப்படும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
காற்பந்து வீராங்கனைகளுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்க FIFA ஒப்புதல்

(படம்: Action Images via Reuters/Andrew Boyers)

காற்பந்து வீராங்கனைகளுக்கு மகப்பேற்று விடுப்பு வழங்க, புதிய விதிமுறைகளின்கீழ் FIFA எனப்படும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

14-வார மகப்பேற்று விடுப்புக்குப் பின், வீராங்கனைகள் அவர்கள் விளையாடும் அணியில் மீண்டும் இணைந்து விளையாடுவதுடன், போதுமான மருத்துவ ஆதரவும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், தொழில்முறைக் காற்பந்து விளையாட்டில் ஈடுபடுவதை முழுமையாக ஊக்குவிக்க வேண்டுமென்றால் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெண் விளையாட்டாளர்களுக்கு, வேலை நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்று கூறிய FIFA, அவர்கள் மகப்பேற்று விடுப்பில் சென்றால் மீண்டும் எப்போது விளையாட அனுமதிக்கப்படுவோம் என்ற கவலை எழக்கூடாது என்று குறிப்பிட்டது.

உலகம் முழுவதும் FIFAவின் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும். பயிற்றுவிப்பாளர்களுக்கும் அந்தச் சலுகைகள் நீட்டிக்கப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்