Images
  • ronaldo (1)
    (படம்: Instagram/ Cristiano)

நோய்த்தொற்றால் உலகக் காற்பந்து விளையாட்டுக்கு 11 பில்லியன் டாலர் நட்டம் ஏற்படும்: FIFA

COVID-19 நோய்த்தொற்றால் உலகளவில் காற்பந்து விளையாட்டுகளுக்குச் சுமார் 11 பில்லியன் டாலர் நட்டம் ஏற்படும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம்
(FIFA) தெரிவித்துள்ளது.

காற்பந்து அமைப்புகளைக் காக்கும் விதமாக FIFA தற்போது 1.5 பில்லியன் டாலர் அவசர கால நிதி உதவி வழங்கியுள்ளது, அதைப்பெற இதுவரை 150-க்கும் மேற்பட்ட காற்பந்து அமைப்புகள் விண்ணப்பித்துள்ளன.

விளையாட்டு அரங்கத்தில் ரசிகர்கள் இல்லாதது, போட்டிகளின் கால அட்டவணையில் மாற்றம், தொலைக்காட்சி உரிமங்களில் நட்டம் எனக் காற்பந்து அமைப்புகள் பல சிக்கல்களைத் தற்போது சந்தித்து வருகின்றன.

அதனால் பொருளியல் ரீதியாக காற்பந்தில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நோய்த்தொற்றின் பாதிப்பு அடுத்த பருவத்தையும் பாதிக்கும் என்று அமைப்புகள் அச்சத்தில் உள்ளன.

நோய்த்தொற்றால் ஐரோப்பியக் காற்பந்து அமைப்புகள் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதையடுத்து தென் அமெரிக்க அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாய்க் கூறப்பட்டது.  

Top