Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

'இரு இல்லாவிட்டால் வெளியேறு' பணக்காரக் காற்பந்து அணிகளை எச்சரித்திருக்கும் FIFA

'இரு இல்லாவிட்டால் வெளியேறு' பணக்காரக் காற்பந்து அணிகளை எச்சரித்திருக்கும் FIFA

வாசிப்புநேரம் -
'இரு இல்லாவிட்டால் வெளியேறு' பணக்காரக் காற்பந்து அணிகளை எச்சரித்திருக்கும் FIFA

படம்: REUTERS/Arnd Wiegmann

ஐரோப்பாவின் 12 பிரபல பெரிய காற்பந்து அணிகள் அறிமுகப்படுத்தவுள்ள புதிய தொடருக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

European Super League என்ற அந்தத் தொடரில் பங்கேற்றால் அனைத்துலகப் போட்டிகளிலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் பங்கேற்க அந்த அணிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று UEFA அமைப்பு அறிவித்துள்ளது.

FIFA என்னும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனமும் அந்த அணிகளுக்குக் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளது.

அணிகள், தங்களது விதிமுறைகளைச் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் இல்லாவிட்டால் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று FIFA கூறியுள்ளது.

12 அணிகளின் நடவடிக்கையை அரசியல்வாதிகளும், முன்னாள் காற்பந்து விளையாட்டாளர்களும் குறைகூறியுள்ளனர்.

விளையாட்டு பொதுவானது. அதில், வசதி படைத்த அணிகள் தங்களுக்கென ஒரு தொடரை அமைத்துக் கொண்டு விளையாடுவது சரியல்ல என்று அவர்கள் கருத்துரைத்தனர்.

European Super League தொடரில் உள்ள குழுக்கள்:

1. ஆர்சனல் (Arsenal)

2. செல்சி (Chelsea)

3. லிவர்ப்பூல் (Liverpool )

4. டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur )

5. மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City)

6. மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United )

7. AC மிலான் (A. C Milan)

8. இன்டர் மிலான் (Inter Milan)

9. யுவெண்ட்டஸ் (Juventus)

10. பார்சலோனா (Barcelona)

11. ரியால் மாட்ரிட் (Real Madrid)

12. எட்லடிக்கோ மாட்ரிட் (Atlético Madrid)

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்