Images
  • world cup america
    (படம்:  AP Photo/Alessandra Tarantino)

2023ஆம் ஆண்டின் பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 32 அணிகள்

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA), 2023ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கும் என்று தெரிவித்திருக்கிறது.

போட்டியை ஏற்றுநடத்த விரும்பும் நாடுகள் ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என்றும் அது கூறியது.

முதல்முதலாக பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது அதில் 12 அணிகள் கலந்து கொண்டன.

தற்போது நடந்துமுடிந்த பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 24 அணிகள் களம் இறங்கின.

1998ஆம் ஆண்டு முதல், ஆண்கள் உலக கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 32 அணிகள் விளையாடிவருகின்றன.

2023ஆம் போட்டியை ஏற்று நடத்த ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 9 நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

Top