Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து ஏற்றுநடத்தும்

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து ஏற்றுநடத்தும்

வாசிப்புநேரம் -
2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து ஏற்றுநடத்தும்

( படம் : REUTERS/Sergei Karpukhin )

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து ஏற்றுநடத்தும் என அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்தது.

மொரோக்கோ உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பை ஐந்தாவது முறையாக இழந்தது.

2026 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இன்று மாஸ்கோவில் நடந்த விளக்கப்படைப்பில் அந்த நாடுகள் கலந்துகொண்டன.

அதில் உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து நடத்தினால் 11 பில்லியன் டாலர் இலாபம் ஈட்டலாம் என அவை தெரிவித்தன.

ஆனால் மொரோக்கோ 5 பில்லியன் டாலர் லாபத்தை மட்டும்தான் காட்டியது.

மொத்தம் 80 போட்டிகள் நடைபெறவுள்ளன, அதில் அமெரிக்கா 60 போட்டிகளையும், கனடாவும், மெக்ஸிகோவும் தலா 10 போட்டிகளையும் நடத்தும்.

2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கத்தாரில் நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்