Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நிறைவு விழா இன்று

கடந்த ஒரு மாதமாகக் களைகட்டி வந்த உலகக் கிண்ணக் காற்பந்து இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நிறைவு விழா இன்று

(படம்: AFP/Pierre-Philippe MARCOU, Gabriel BOUYS)


கடந்த ஒரு மாதமாகக் களைகட்டி வந்த உலகக் கிண்ணக் காற்பந்து
இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள காற்பந்து ரசிகர்கள் இன்றைய இறுதி ஆட்டத்தைக் காணக் காத்திருக்கின்றனர்.

ஆட்டம் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நிறைவு விழா கொண்டாடப்படும்.

பிரபல நடிகர் வில் ஸ்மித், பாடகர் நிக்கி ஜாம், எரா இஸ்டெர்ஃபி (Will Smith, Nicky Jam, and Era Istrefi ) விழா ' Live It Up ' பாடலை படைக்கவுள்ளனர்.

பிறகு தென் கொரியாவின் பாப் பாடகர்களும் சில பாடல்களைப் படைக்கவுள்ளனர்.

பிரான்ஸ் தனது மூன்றாவது உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் பங்கேற்கிறது.

குரோஷியா அதன் முதல் இறுதி ஆட்டத்தை இன்று விளையாடவுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்