Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் வீரர்கள்

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் விளையாட்டாளர்கள் சிலர் தோக்கியோவுக்குச் சென்றுள்ளனர்.

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் வீரர்கள்

(படம்: Singapore National Paralympic Council)

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் விளையாட்டாளர்கள் சிலர் தோக்கியோவுக்குச் சென்றுள்ளனர்.

அதிகாரிகள், விளையாட்டாளர்கள் உள்ளிட்ட 21 பேர் சிங்கப்பூர்க் குழுவில் உள்ளனர்.

விளையாட்டாளர்கள் குதிரையேற்றம், நீச்சல், எடை தூக்கும் போட்டி ஆகியவற்றில் பங்கேற்பர்.

மேலும் சில விளையாட்டாளர்கள் நாளை ஜப்பானுக்குப் புறப்படுவர்.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில், சிங்கப்பூரைப் பிரதிநிதித்து மொத்தம் 10 பேர் பங்கேற்கவுள்ளனர்.

அவர்கள் 6 விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள்.

சிங்கப்பூர், கடந்த மூன்று உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளது.

அது மொத்தம் 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றை வென்றது.

லாரன்ஷியா டான் (Laurentia Tan), தெரேசா கோ (Theresa Goh), யிப் பின் சியூ (Yip Pin Xiu) ஆகியோர் அந்தப் பெருமையைப் பெற்றுத்தந்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்