Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து ஆட்டத்தில் கட்டித்தழுவி முத்தமிட்ட விளையாட்டாளர்கள் - விதிமுறையைக் கடுமையாக்கக் கோரிக்கை

 காற்பந்து ஆட்டத்தில் கட்டித்தழுவி முத்தமிட்ட விளையாட்டாளர்கள் - விதிமுறையைக் கடுமையாக்கக் கோரிக்கை 

வாசிப்புநேரம் -
காற்பந்து ஆட்டத்தில் கட்டித்தழுவி முத்தமிட்ட விளையாட்டாளர்கள் - விதிமுறையைக் கடுமையாக்கக் கோரிக்கை

படம்: AFP

ஜெர்மனியில் காற்பந்து ஆட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

COVID-19 கிருமித்தொற்றுக் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட ஜெர்மனியின் Bundesliga காற்பந்து ஆட்டங்கள் கடந்த சனிக்கிழமை மீண்டும் தொடங்கின.

திடலில் விளையாடுவோரைத் தவிர்த்து, பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட மற்ற ஊழியர்கள் முகக் கவசம் அணிவதும், பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

இருப்பினும் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் விளையாட்டாளர்கள் கோல் புகுத்திய மகிழ்ச்சியில் சக விளையாட்டாளரைக் கட்டித்தழுவியது, முத்தமிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களின் நடவடிக்கை, சில சுகாதாரக் கேள்விகளை எழுப்பியதுடன், Bundesliga விதிமுறைகளைக் கடுமையாக்கவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் COVID-19 கிருமித்தொற்றுக் காரணமாக மாண்டவர்கள் எண்ணிக்கைக் குறையத் தொடங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நேரத்தில் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் படிப்படியாகத் தொடங்கியுள்ளன.

இருப்பினும் இப்போதைக்கு அரங்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்