Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசியப் போட்டிகளில் கட்டுப்பாட்டை மீறிய மேலும் மூன்று சிங்கப்பூர் விளையாட்டாளர்கள்

தென்கிழக்காசியப் போட்டிகளில் கட்டுப்பாட்டை மீறிய மேலும் மூன்று சிங்கப்பூர் விளையாட்டாளர்கள்

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டிகளில் கட்டுப்பாட்டை மீறிய மேலும் மூன்று சிங்கப்பூர் விளையாட்டாளர்கள்

(படம்: FAS/Instagram)

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் காற்பந்து விளையாட்டாளர்களில் மேலும் மூவர் கட்டுப்பாட்டை மீறியுள்ளதாக சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 9 பேர் கட்டுப்பாட்டை மீறியுள்ளனர்.

தேசிய விளையாட்டாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தைக் கோட்பாடுகளை மீறும் விதத்தில் அவர்கள் நடந்துகொண்டதாய்க் கூறப்பட்டது.

ஷா ஷாஹிரான், ஹாமி சியாஹின், சய்ஃபுல்லா அக்பர் ஆகிய மூவரும் கட்டுப்பாட்டை மீறியதற்காகக் கடும் நடவடிக்கையை எதிர்நோக்குவர் என்று சங்கம் தெரிவித்தது.

இதுபோன்ற நடத்தை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் நெறிமுறைகளை மீறும் விளையாட்டாளர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்றும் சங்கம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்