Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இளையர் ஒலிம்பிக் போட்டிகளிலும், சிங்கப்பூர்க் குழுவை வழிநடத்தும் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனைகள்

சிங்கப்பூரின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனைகள் இருவர்,எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இளையர் ஒலிம்பிக் போட்டிகளிலும், சிங்கப்பூர்க் குழுவை வழிநடத்துவர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனைகள் இருவர்,எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், இளையர் ஒலிம்பிக் போட்டிகளிலும், சிங்கப்பூர்க் குழுவை வழிநடத்துவர்.

ஒலிம்பிக் குறிசுடும் போட்டியில் 3 முறை பங்கெடுத்த லீ உங் இயூவும், நீச்சல் வீராங்கனை டாவ் லீயும் அவ்விருவர்.

சிங்கப்பூர்ப் போட்டியாளர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் முழுத் திறனை வெளிப்படுத்துவதற்கு உகந்த சூழல் உருவாக்கப்படும் என்று லீ உங் இயூ தெரிவித்தார்.

அவருக்கு முன்னாள் தேசிய Rugby விளையாட்டாளர் முகம்மது அஸார் யூசூஃப், வாட்போர் வீராங்கனை ரூத் இங் இருவரும் அந்தப் பணியில் உறுதுணையாக இருப்பர்.

ஆசியான் விளையாட்டுப் போட்டிகள், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம், ஜாகர்தாவிலும் பலேம்பாங்கிலும்  நடைபெறவுள்ளன.

இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டாளர்களை டாவ் லீ வழிநடத்துவார்.

அர்ஜென்டினாவில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இளையர்கள் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய டாவ் லீ, போட்டிகளில் சிங்கப்பூர்க் குழு சிறப்பாகப் பங்கெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்