Images
  • Formula 1
    (படம்: REUTERS/Bernadett Szabo/File Photo)

2019இன் Formula One கார்ப் பந்தய பட்டியலின் உறுதிப்படுத்தப்பட்ட நாளேடு

Formula One கார்ப் பந்தயங்கள், அடுத்த ஆண்டு 21 இடங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற உலக மோட்டார் விளையாட்டு மன்றக் கூட்டத்துக்குப் பிறகு அதுகுறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இடைக்காலப் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டதாக, Formula One கார்ப் பந்தயங்களின் நிர்வாக அமைப்பு கூறியது.

அத்துடன் சில விதிமுறைகளைத் திருத்தியமைக்கவும் ஒப்புதல் அளித்திருப்பதாக அது குறிப்பிட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி, ஆஸ்திரேலியாவில் முதல் பந்தயம் தொடங்கும். அடுத்த ஆண்டின் இறுதி F1 கார்ப் பந்தயம் அபுதாபியில் இடம்பெறும்.

இரவு நேரக் கார்ப் பந்தயம், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நடைபெறும்.


Top