Images
  • hamilton
    படம்; AFP

Formula One -இன் ஆயிரமாவது பந்தயத்தை வென்றார் ஹேமில்ட்டன்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Formula One -இன் ஆயிரமாவது பந்தயத்தை லூயிஸ் ஹேமில்ட்டன் வென்றார்.

இன்று சீனாவில் நடைபெற்ற பந்தயத்தில் அவர் முதலாவதாக வந்தார்.

அதன்மூலம் Formula One பந்தயங்களில் 75ஆவது முறையாக ஹேமில்ட்டன் வெற்றிபெற்றுள்ளார்.

இன்னும் 16 பந்தயங்களை ஹேமில்ட்டன் வெல்லும் பட்சத்தில் Formula One பந்தயங்களில் ஆக அதிகமுறை வெற்றிபெற்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார்.

மெர்ஸிடிசின் வல்டாரி பாட்டாஸ் (Valtteri Bottas) இரண்டாவது இடத்தை பெற்றார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபெராரியின் (Ferrari) செபாஸ்டியன் வெட்டல் (Sebastian Vettel) மூன்றாம் இடத்தில் வந்தார்.

அடுத்த பந்தயம் ஏப்ரல் 28ஆம் தேதி அசர்பைஜானில் நடக்கவிருக்கிறது.  

Top