Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரான்ஸ் விளையாட்டு அரங்கங்களில் 5,000 பேர் வரை அனுமதி

 பிரான்ஸ் விளையாட்டு அரங்கங்களில் 5,000 பேர் வரை அனுமதி

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் விளையாட்டு அரங்கங்களில் 5,000 பேர் வரை அனுமதி

படம்: AFP

காற்பந்து லீக் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்கும் பிரான்ஸ் அதன் விளையாட்டு அரங்கங்களில் 5,000 ரசிகர்கள் வரை கூடுவதற்கு அனுமதிக்கவுள்ளது.

அந்நாட்டு அரசாங்கம் அந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

ஆகஸ்ட் மாத இறுதிவரை அதிகபட்சம் 5,000 பேர் விளையாட்டு அரங்கங்களில் அனுமதிக்கப்படுவர்.

உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலைப் பொறுத்து ரசிகர்களை அதிகமாக அனுமதிக்க முடியும்.

ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் அனுமதிக்கப்படும் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் அணுக்கமாகக் கவனிக்கப்படும் என்று பிரெஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்தது.

ரசிகர்களை மீண்டும் விளையாட்டு அரங்கங்களுக்குள் அனுமதிப்பதன் மூலம் அணிகள் சிறிது வருவாய் ஈட்டமுடியும்... ஆனால் நோய்ப்பரவல் எப்படி உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு தான் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

ரசிகர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், இருக்கைகளில் அமர் ந்திருக்க வேண்டும், 10 பேருக்கு மேல் ஒரு இடத்தில் குழுவாக இருக்கக்கூடாது போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்