Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மயக்க மருந்துக் கோளாற்றால் 40 ஆண்டுகள் நினைவிழந்து மனைவியால் பராமரிக்கப்பட்ட காற்பந்து வீரர் காலமானார்

மயக்க மருந்துக் கோளாற்றால் 40 ஆண்டுகள் நினைவிழந்து மனைவியால் பராமரிக்கப்பட்ட காற்பந்து வீரர் காலமானார்

வாசிப்புநேரம் -

நினைவிழந்த நிலையிலேயே (coma) சுமார் 40 ஆண்டுகள் இருந்த பிரான்ஸ் முன்னாள் காற்பந்து வீரர் ஜீன்-பியர் ஆடம்ஸ் (Jean-Pierre Adams) இன்று காலமானார்.

அவருக்கு வயது 73.

ஆடம்ஸ் மாண்ட தகவலை, அவரது முன்னாள் அணியான பிரான்ஸின் Paris St Germain உறுதிப்படுத்தியது.

1982ஆம் ஆண்டு மூட்டு அறுவைச் சிகிச்சைக்காக 32 வயது ஆடம்ஸுக்கு மயக்க மருந்து கொடுக்கும்போது அதில் தவறு நேர்ந்தது.

அதனால், ஆடம்ஸின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு அவர், நினைவிழந்தார்.

நினைவிழந்த நாள்முதல் ஆடம்ஸை, அவரது அன்புமனைவி பராமரித்துவந்தார்.

சிறப்பான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆடம்ஸ் 'the Black Guard'
என்று போற்றப்பட்டார்.

Source: Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்