Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020: குதிக்க மறுத்த குதிரை - கதறி அழுத ஜெர்மன் வீராங்கனை

தோக்கியோ 2020: குதிக்க மறுத்த குதிரை - கதறி அழுத ஜெர்மன் வீராங்கனை

வாசிப்புநேரம் -
தோக்கியோ 2020: குதிக்க மறுத்த குதிரை - கதறி அழுத ஜெர்மன் வீராங்கனை

படம்: AP Photo/Hassan Ammar

தோக்கியோ ஒலிம்பிக் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

போட்டியில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர் விளையாட்டாளர்கள், அதே நேரத்தில் சில பேருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போகிறது.

பெண்டாத்லான் (Pentathlon) என்னும் 5 விளையாட்டுகளைக் கொண்ட போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ஜெர்மன் வீராங்கனை அனிக்கா ஸ்குலூவுக்கு (Annika Schleu) நேற்றைய நாள் சோகமாக அமைந்தது.

அவரின் நீண்டநாள் ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவு தகர்ந்தது.

31 வயதான அனிக்கா முதல் இரண்டு போட்டிகளான வாள்வீச்சு, நீச்சல் ஆகியவற்றில் முதலிடத்தில் முடித்துப் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகித்தார்.

நேற்று நடந்த குதிரையேற்ற விளையாட்டில் அனிக்காவின் குதிரை தடைகள் மீது குதிக்க மறுத்தது, அதனால் முதலிடத்தில் இருந்த அவர் 31ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

குதிரை மீது உட்கார்ந்து கொண்டே அனிக்கா அழுதது பலரை உருகவைத்தது.

அனிக்காவிற்கு இன்னும் குறிசுடுதல், நெடுந்தூர ஓட்டம் ஆகியவை எஞ்சியுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்