Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

20 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த ஜெர்மனி

20 ஆண்டுகளில் முதன்முறையாக, ஜெர்மனி உலகக் கிண்ணத்திற்கான தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்துள்ளது.

வாசிப்புநேரம் -

20 ஆண்டுகளில் முதன்முறையாக, ஜெர்மனி உலகக் கிண்ணத்திற்கான தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்துள்ளது.

ஜெர்மனியில் வட மாசிடோனியாவுடன் நடந்த சுற்றில், இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வட மாசிடோனியா வெற்றிபெற்றது.

சுற்றின் முடிவுகள் மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது என்று ஜெர்மன் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஜோகிம் லோவ் (Joachim Loew) கூறினார்.

ஜெர்மனியின் தோல்வியை அவமானம் என்று அந்நாட்டு ஊடகங்கள் வருணித்தன.

4 முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள ஜெர்மனி, இதுவரை போட்டிக்குத் தகுதிபெறாமல் இருந்ததே இல்லை.

ஆனால், அது J குழுவில் தற்போது 3ஆம் இடத்தில் உள்ளது.

ஆர்மேனியாவும் வட மாசிடோனியாவும் முதல் 2 நிலையில் உள்ளன.

இதற்கு முன், ஜெர்மனி 2001ஆம் ஆண்டில், உலகக் கிண்ணத் தகுதிச்சுற்றில் இங்கிலாந்திடம் தோற்றது.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்