Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் கோல்காவலர் காலமானார்

1966ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக் காற்பந்து அணியின் கோல்காவலர் கோர்டன் பேங்க்ஸ் காலமானார். அவருக்கு வயது 81.

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியின் கோல்காவலர் காலமானார்

(படம்: AFP)

1966ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்துக் காற்பந்து அணியின் கோல்காவலர் கோர்டன் பேங்க்ஸ் காலமானார்.

அவருக்கு வயது 81.

உலகின் ஆகச் சிறந்த கோல்காவலர்களில் ஒருவராகக் கருதப்படும் பேங்க்ஸ் லெஸ்ட்டர் சிட்டி அணிக்கு எட்டு ஆண்டுகள் ஆடினார்.

அதன் பின்னர் ஸ்டோக் சிட்டிக்கு விளையாடினார்.

1966இல் சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை வென்றது பேங்க்ஸின் இங்கிலாந்து அணி.

1970 போட்டியில் பிரேசிலிய நட்சத்திரம் பெலேயின் கோல் முயற்சியை மிகவும் அபாரமாகத் தடுத்தார் பேங்க்ஸ்.

காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறப்பாகத் தடுக்கப்பட்ட கோல் முயற்சிகளில் ஒன்று அது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்