Images
  • Hamilton
    படம்: REUTERS

F1 கார்ப் பந்தயத்தில் 100-ஆவது வெற்றியைப் பெற்ற லூயிஸ் ஹாமில்டன்

F1 கார்ப் பந்தயத்தில் 100-ஆவது வெற்றியைப் பெற்றார் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton).

F1 கார்ப் பந்தய வரலாற்றில் இதுவரை யாரும் 100 பந்தயங்களை வென்றதில்லை. அந்தச் சாதனையைப் படைக்கும் முதல் வீரர் ஹாமில்டன்.

நேற்று ரஷ்யாவில் நடந்த கார்ப் பந்தயத்தில் Mercedes அணியின் ஹாமில்டன் முதலாவதாக வந்தார்.

இரண்டாவது நிலையில் பந்தயத்தை முடிந்தார், Reb Bull ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen).

முன்றாவது நிலையில் வந்தார், Ferrari ஓட்டுநர் கார்லோஸ் சயின்ஸ் (Carlos Sainz).

இந்தப் பருவத்தின் பட்டியலில் ஹாமில்டன் முதல் இடத்தில் உள்ளார்.

அடுத்த கார்பந்தயம் துருக்கியில் அக்டோபர் 10ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

- Reuters 

Top