Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Instagram பக்கம் மூலம் கார்ப் பந்தய வீரர் ஹாமில்ட்டன் மீது இனவாதத் தாக்குதல்

Instagram பக்கம் மூலம் கார்ப் பந்தய வீரர் ஹாமில்ட்டன் மீது இனவாதத் தாக்குதல்

வாசிப்புநேரம் -
Instagram பக்கம் மூலம் கார்ப் பந்தய வீரர் ஹாமில்ட்டன் மீது இனவாதத் தாக்குதல்

படம்: AFP/Behrouz MEHRI

F1 கார்ப் பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்ட்டன் (Lewis Hamilton) மீது இனவாதம் சார்ந்த கருத்துகள் Instagram பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் லூயிஸ் ஹாமில்ட்டன் (Lewis Hamilton) பிரிட்டனில் நடந்த கார்ப் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு அவர் மீது சமூக ஊடகங்கள் வழி இனவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியீட்டன.

வெற்றிபெற்ற சில மணிநேரத்திற்குப் பிறகு, குரங்கு emoji உள்ளிட்ட இனவெறிச் செய்திகள் ஹாமில்ட்டனின் Instagram பக்கத்தில் பதிவாயின.

36 வயதான ஹாமில்ட்டன் கார் பந்தயங்களின் நட்சத்திர வீரர்.

ஹாமில்ட்டன் சமூக நீதிக்காகக் குரல் கொடுப்பவர். அவர் Black Lives Matter அனைத்துலக இயக்கத்தின் ஆதரவாளர்களில் ஒருவர்.

கடந்த வாரம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) இனவாதச் சம்பவங்களைத் தடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்