Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து : 190 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் கீழ் ரியால் மாட்ரிட் குழுவிற்குச் செல்லும் ஹஸார்ட்

பிரபலக் காற்பந்து வீரர் ஈடன் ஹசார்டை (Eden Hazard)190 மில்லியன் டாலருக்கு மேல் கொடுத்து செல்சி குழுவிடமிருந்து வாங்க ரியால் மாட்ரிட் (Real Madrid) ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பிரபலக் காற்பந்து வீரர் ஈடன் ஹசார்டை (Eden Hazard)190 மில்லியன் டாலருக்கு மேல் கொடுத்து செல்சி குழுவிடமிருந்து வாங்க ரியால் மாட்ரிட் (Real Madrid) ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் வரவிருக்கின்ற பருவத்தில் ஹஸார்ட் ரியால் மாட்ரிட் குழுவைப் பிரதிநிதித்து ஆடுவார் என்றும் ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 7 ஆண்டுகளாக ஹஸார்ட் இங்கிலீஷ் பிரிமியர் லீக் அணியான செல்சிக்கு முன்னிலை ஆட்டக்காரராக விளையாடி வந்தார்.

28 வயதான அவர் செல்சி அணியை விட்டுப் பிரிவது கடினமான ஒன்று என்று கூறினார்.

செல்சி அணிக்காக 352 போட்டிகளில் களமிறங்கிய ஹஸார்ட் 110 கோல்கள் புகுத்தியுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்