Images
  • kesavan soon main cover pic
    (படம்: Facebook/Singapore National Olympic Council காணொளி)

ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: அமெரிக்க முன்மாதிரி ஓட்டப்பந்தய வீரரின் தூண்டுதலால் ஒலிம்பிக் சென்ற சிங்கப்பூரர்

1956 மெல்பர்ன் ஒலிம்பிக்சில் பங்குபெறும்போது, ஓட்டப்பந்தய வீரர் கேசவன் சூனுக்கு (Kesavan Soon) வயது 17.

அவர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்டார்.

1936 ஒலிம்பிக்சில் 4 முறை தங்கப் பதக்கம் வென்ற ஜெஸ்ஸி ஓவன்ஸை (Jesse Owens) தமது முன்மாதிரியாக அவர் கருதினார்.

ஒலிம்பிக்சில் பங்குபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பு, கேசவனுக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற திடல்தட வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சிங்கப்பூரில் ஒரு விரிவுரை அளிக்க அவர் வந்திருந்தார்.

அப்போது ஓவன்ஸுகு ஓடிக் காட்டுவதற்கு ஒருவரின் உதவி தேவைப்பட்டது.

அதற்கு ஓவன்ஸ் பள்ளி மாணவனான கேசவனைத் தேர்ந்தெடுத்தார்.

அவர் வேகமாக ஓடுவதைக் கண்டு ஒலிம்பிக் ஜாம்பவான் ஓவன்ஸுக்குப் பிடித்துப்போனது.


(படம்: Kesavan Soon)

அவர் கேசவனை அழைத்துப் பேசினார். கேசவனைப் பாராட்டிய ஓவன்ஸ், கடினமாக பயிற்சி செய்ய வேண்டும் என்றும் நல்ல எதிர்காலம் உள்ளதென்றும் கூறி அவருக்கு ஊக்கமளித்தார்.

அந்த வார்த்தைகள் கேசவனின் திடல்தட வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக அமைந்தன.

ஒரு வருடத்தில், கேசவன் 1956 மெல்பர்ன் ஒலிம்பிக்சில் பிரபல வீரர்களுடன் போட்டியிட்டார்.

அப்போது சிங்கப்பூர் அணியின் ஒரே மாணவராகவும் அவர் திகழ்ந்தார்.

தகவல்: SNOC

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

 

Top