Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிங்கப்பூரில் விளையாடவிருக்கும் மென்செஸ்ட்டர் யுனைட்டட், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், யுவெண்டஸ் அணிகள்

சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மென்செஸ்ட்டர் யுனைட்டட், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், யுவெண்டஸ், இண்ட்டர் மிலான் அணிகள் பங்குபெறவிருப்பதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் விளையாடவிருக்கும் மென்செஸ்ட்டர் யுனைட்டட், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், யுவெண்டஸ் அணிகள்

படம்: AFP

சிங்கப்பூரில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மென்செஸ்ட்டர் யுனைட்டட், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், யுவெண்டஸ், இண்ட்டர் மிலான் அணிகள் பங்குபெறவிருப்பதாகப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆட்டங்கள் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கின்றன.

ஜூலை 20ஆம் தேதி மென்செஸ்ட்டர் யுனைட்டட், இண்ட்டர் மிலான் அணிகள் மோதுகின்றன.

ஜூலை 21ஆம் தேதி டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பருடன், யுவெண்டஸ் அணியுடன் பொருதுகிறது.

இரண்டு ஆட்டங்களும் இரவு 7:30 மணிக்குத் தொடங்கும்.

எந்தெந்த வீரர்கள் விளையாடப் போகிறார்கள் என்பது பற்றிய தகவல்களைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கிண்ணத்தை வென்றது.

நுழைவுச்சீட்டு விற்பனை ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்குகிறது.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்