Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நார்வே காற்பந்துச் சங்கத்துடன் ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் இக்ஷான் ஃபாண்டி

சிங்கப்பூர்க் காற்பந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர் இக்ஷான்   ஃபாண்டி (Ikhsan Fandi), நார்வேயின் Raufoss IL காற்பந்துச் சங்கத்துடன் ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
நார்வே காற்பந்துச் சங்கத்துடன் ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் இக்ஷான் ஃபாண்டி

(படம்: Raufoss website)

சிங்கப்பூர்க் காற்பந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர் இக்ஷான் ஃபாண்டி (Ikhsan Fandi), நார்வேயின் Raufoss IL காற்பந்துச் சங்கத்துடன் ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

சங்கம் இன்று (ஜனவரி 13) அதனை அறிவித்தது.

19 வயது இக்ஷான் ஃபாண்டி, உள்ளூர்க் காற்பந்துப் பிரபலம் ஃபாண்டி அஹ்மாட்டின் இரண்டாவது மகன்.

கடந்த ஒரு வாரமாக அவர் Raufoss சங்கத்துடன் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தின் 64ஆவது நிமிடத்தில் இக்ஷான் ஃபாண்டி, மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கினார்.

சென்ற ஆண்டின் Suzuki கிண்ணப் போட்டியில் சிங்கப்பூருக்கு இரண்டு கோல்களைப் புகுத்திய இக்ஷான் ஃபாண்டியுடனான ஈராண்டு ஒப்பந்தத்தை Raufoss இணையத்தளம் உறுதிசெய்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்