Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தியா: மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு இணையாகப் புகழப்படும் பாரம்பரிய விளையாட்டு வீரர்

இந்தியா: மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு இணையாகப் புகழப்படும் பாரம்பரிய விளையாட்டு வீரர் 

வாசிப்புநேரம் -
இந்தியா: மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு இணையாகப் புகழப்படும் பாரம்பரிய விளையாட்டு வீரர்

(படம்: AFP)

இந்தியாவில் தற்போது ஸ்ரீநிவாஸ் கௌடா(Srinivas Gowda) என்னும் இளையரின் சாதனை ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டின் சாதனைக்கு இணையாகப் பேசப்படுகிறது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடக்கும் 'கம்பாளா ' என்னும் எருமைகளுடன் ஓடும் பாரம்பரியப் போட்டியில் ஸ்ரீநிவாஸ் ஓடிய ஓட்டம் சமூக ஊடகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட் 100 மீட்டர் தொலைவை 9.58 விநாடிகளில் ஓடிக் கடந்தார்.

கட்டுமான ஊழியரான 28 வயது ஸ்ரீநிவாஸ் 142 மீட்டர் தொலைவை ஓடிக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 13.42 விநாடிகள்.

இருப்பினும் போல்ட் செய்த சாதனை ஒலிம்பிக் குழுவினரால் மிகவும் துல்லியமாக அளக்கப்பட்டது என்பதைச் சிலர் சுட்டுகின்றனர்.

சமூக ஊடகத்தில் அதிகம் பகிரப்பட்ட படங்களைக் கண்டு தற்போது இந்திய விளையாட்டு அமைச்சு ஸ்ரீநிவாஸிற்கு நிபுணத்துவப் பயிற்சி கொடுத்துப் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்த அழைப்புவிடுத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்