Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Indian Premier League ஆட்டங்களுக்கு மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும்

Indian Premier League ஆட்டங்களுக்கு மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
Indian Premier League ஆட்டங்களுக்கு மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும்

(படம்: AFP/Money SHARMA)

Indian Premier League ஆட்டங்களுக்கு மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

2022- இலிருந்து மொத்தம் 10 அணிகள் போட்டியிடவிருக்கின்றன.

தற்போது 8 அணிகள் உள்ளன.

ஓராண்டுக்குள், புதிய அணிகளுக்கான தளவாடத் தேவைகள், ஊடக உரிமை, அணிகளுக்கான வடிவமைப்பு, போட்டிகளின் விரிவாக்கம் ஆகியவற்றை பரிசீலிக்கமுடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

Indian Premier League போட்டிகளின் வர்த்தக மதிப்பு சுமார் 6.8 பில்லியன் டாலர்.

இவ்வாண்டு போட்டிகளின் சில ஆட்டங்கள், இந்தியா முழுவதும் 200 மில்லியன் பார்வையைாளர்கள் ஈர்த்துள்ளது.

தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில், கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

பொதுவாக, அணிகளுக்கு சிறந்த விளையாட்டாளர்களைச் சேர்ப்பதற்கு உலக அளவில் தேடும் பணிகள் நடைபெறும். விளையாட்டாளர்களை அணியில் சேர்க்கப் பெரும்பணம் செலவிடப்படும்.

Royal Challengers Bangalore அணிக்கு 15 ஆட்டங்களில் விளையாடிய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 2.3 மில்லியன் டாலர் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பெரும் நிறுவனங்களான Adani குழுமமும் RP-Sanjiv Goenka குழுமமும் புதிய அணிகளின் மீது நாட்டம் கொண்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்