Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கிருமிப்பரவலுக்கு இடையிலும் கிரிக்கெட் போட்டிகள்

உலக அளவில் பிரபலமான இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவலுக்கு இடையிலும் கிரிக்கெட் போட்டிகள்

படம்: AFP

உலக அளவில் பிரபலமான இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அந்தப் போட்டி கொரோனா கிருமிப்பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் நோய்ப்பரவல் தற்போது அதிகரித்து வரும் சூழலால் IPL போட்டிகள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி வரை நடக்கும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர்கள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு வந்த பிறகு தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவைப்படலாம் என்று கூறப்பட்டது.

COVID-19 நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்க வேண்டிய T20 உலகக் கிண்ணப் போட்டி அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

IPL போட்டிகளை இந்த ஆண்டு நடத்தாவிட்டால் தனக்கு 500 மில்லியன் டாலருக்கு மேல் நட்டம் எற்படும் என்று இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்