Images
  • boston marathon japan
    (படம்: AFP/Ryan McBride)

வெற்றியைக் கொண்டாட விரும்பி விடுப்புக் கேட்டவருக்குப் பாராட்டு

ஜப்பானைச் சேர்ந்தவர், பள்ளி நிர்வாகி யூக்கி கவௌச்சி(Yuki Kawauchi).

பாஸ்டன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இவர்தான் வெற்றியாளர்...

இதை இவராலேயே நம்பமுடியவில்லை.

எந்த முறையான பயிற்சியும் இல்லை.. பயிற்சியாளரும் இல்லை... ஆதரவாளரும் இல்லை..

அதனால் என்ன ? வெற்றி வெற்றிதானே!

அந்த வெற்றியைக் கொண்டாட, பள்ளிக்கு அழைத்துக் கூடுதலாக ஒருநாள் விடுமுறை கேட்டார்.

மனமுவந்து வழங்கியது பள்ளி நிர்வாகம்.

தமது வெற்றியைச் சற்றும் எதிர்பார்க்காத அவர், அடுத்த நாள் ஜப்பானுக்குத் திரும்பி புதன்கிழமை வேலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

1987ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாஸ்டன் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் ஜப்பானியர் அவர்.

42.1 கிலோமீட்டர் தொலைவை 2 மணி நேரம், 15 நிமிடம், 58 விநாடிகளில் அவர் முடித்தார்.

கடந்த மாதம், அவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

இரண்டு மணி நேரம், 20 நிமிடங்களுக்குள் ஆக அதிகமான - 78 ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றதற்காக அவருக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது.  

உங்கள் கருத்து

Top