Images
  • japan olympic
    (படம்: REUTERS/Kim Kyung-Hoon)

ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுவதை நிராகரிக்கும் ஜப்பான்

ஜப்பானிய அரசாங்கம், கொரோனா கிருமிப்பரவலால் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுவதை நிராகரித்துள்ளது.

இவ்வாண்டு ஜூலை 23ஆம் தேதி திட்டமிட்டப்படி விளையாட்டுகளை நடத்துவதில் ஏற்பாட்டாளர்கள் குறியாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளையாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நோய்ப்பரவல் காரணமாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ரத்து செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம் என்று ஜப்பானிய அரசாங்கம் ரகசியமாக முடிவெடுத்துள்ளதாக The Times எனும் பிரிட்டிஷ் நாளேடு குறிப்பிட்டது.

அந்த விளையாட்டுகளை இந்த நேரத்தில் நடத்தவேண்டாம் என்று 80 விழுக்காட்டு மக்கள் கருதுவதாக கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் விளையாட்டாளர்கள் மூலம் கொரோனா கிருமி இன்னும் அதிகமாகப் பரவக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

வடகிழக்காசிய நாடுகளில் ஜப்பானே கிருமிப்பரவலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு 352,000-க்கும் அதிகமானோரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; நாலாயிரத்துத் தொண்ணூறு பேர் மாண்டனர். 

Top