Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போகலாம் : ஜப்பான் அமைச்சர்

ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போகலாம் : ஜப்பான் அமைச்சர்

வாசிப்புநேரம் -
ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போகலாம் : ஜப்பான் அமைச்சர்

படம்: REUTERS

COVID-19 நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்தக் கோடைகாலத்தில் நடக்காமல் போகலாம் என்று ஜப்பான் அமைச்சர் தாரோ கோனோ ( Taro Kono) கூறியுள்ளார்.

ஜப்பான் எல்லா விதமான முடிவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும் என்றார் அவர்.

போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த எல்லா வகையான முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் திரு தாரோ தெரிவித்தார்.

தற்போது உலக அளவில் மீண்டும் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுச் சம்பவங்களால் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது.

தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பானிய மக்களுக்கு இருந்த ஆர்வம் இப்போது குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் ஜப்பானியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுமார் 77 விழுக்காட்டினர் போட்டியை ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க விருப்பம் தெரிவித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்